Skip to product information
தெற்கிலிருந்து
Rs. 145.00
Rs. 137.75
Save 5%
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சமூகச் சிந்தனையையும் மேட்டிமை எதிர்ப்பையும் தூண்டும் தன்மையில் அமைந்துள்ளன. கடந்த கால வரலாற்றின் இருண்ட பகுதிகளையும், அதில் ஒளியேற்றப் போராடிய பண்பாட்டு வீரர்களையும் இந்நூல் நன்கு அறிமுகப் படுத்துகிறது.
தமிழகத்தில் சமூக வரலாறு கல்விப் புலங்களைத் தாண்டி ஆழமான முறையில் இன்னும் எழுதப்படவில்லை. ஆர்வம் கொண்ட இடதுசாரி மற்றும் புதிய இடதுசாரி ஆய்வாளர்கள் அவ்வப்போது எழுதி வரும் கட்டுரைகளும் சிறு நூல்களும் தாம் இக்குறையை ஓரளவுக்குத் தீர்த்து வருகின்றன. இந்நூலும் இத்தகைய முயற்சியில் ஒன்றாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது; வரவேற்கத்தக்கது; இதுபோன்ற நூல்களை ஆசிரியர் தொடர்ந்து எழுத வேண்டும். -ஆ.சிவசுப்பிரமணியன்
