Skip to product information
ஏய்... சொல்லு! சொல்லு!
Rs. 140.00
Rs. 133.00
Save 5%
'ஏய்... சொல்லு! சொல்லுர் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம் எனக்கு நன்கு அறிமுகமானவர். பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் மூன்றாம் தலைமுறையைச் சோர்ந்தவர். 9 கதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி நூல் ஆசிரியரின் பார்வையும் இலட்சியமும் பொதுவுடைமைத் தத்துவத்தைச் சார்ந்தவை. தனிமனித வாழ்வில் அறமும், சமூகத்தில் மதசார்பற்ற சனநாயகமும், பொருளாதாரத்தில் பொதுவுடைமைப் பொருளாதாரமும் பரிணமித்தால் உலகில் தமிழகம், இந்தியா செம்மையுறும் என்ற இலட்சியத் தாகமுடையவர். இந்தக் கருத்துக்கள் அவரது சிறுகதை முழுவதும் பின்னிப்படர்ந்து ஊடும் பாவும் போல பரவிக் கிடக்கின்றன.
